ஒன்றாரியோ துப்பாக்கிச் சூடு : பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
ஒன்றாரியோ தலைநகர் ரொறன்டோவில் திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் நடந்துள்ளது.


சம்பவம் குறித்து ரொறன்டோ பொலிஸ் தரப்பு கூறுகையில், Lakeshore Boulevard Wes மற்றும் Thirtieth தெருவுக்கு அருகிலுள்ள Long Branch பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.


சம்பவ இடத்திற்கு விரைந்த போது, அங்கு இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டனர். உடனே மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். மூவரில் ஒருவர் மருத்துவமனையில் இறந்து விட்டார்.


இருவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ள அதேசமயம், சம்பவ இடத்தில் தோட்டா உறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார், சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனே தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *