இலங்கையில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டமையால் இன்றிலிருந்து உணவகங்களில் சமைத்த உணவுகள் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உணவகத்தில் உணவுகள் சமைப்பதற்கு கட்டாயம் எரிவாயு அவசியமாகும் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
உணவகங்களில் எரிவாயு அடுப்புகள் மாத்திரமே உள்ளன. எரிவாயுக் கலவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட சிலிண்டர்களின் விநியோ கத்தை மாத்திரம் நிறுத்துமாறு லிட்ரோ நிறுவனத்திடம் கேட்டுக் கொள்கின் றோம். இல்லை என்றால் இன்று முதல் உணவக உணவு விநியோகம் முழுமையாக முடங்கிவிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று மாலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 20 இடங்களில் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
————–
Reported by : Sisil.L