எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பல முக்கிய வீதிகளில் வாகனங்களை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சிலாபம், கொழும்பு, அவிசாவளை, கொழும்பு, கண்டி, மஹியங்கனை, இரத்தினபுரி, ரம்புக்கன, கேகாலை, காலி, பதுளை, கொழும்பு, ஹப்புத்தளை மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக வீதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
போராட்டங்கள் காரணமாக கொழும்பிலிருந்து ரம்புக்கனை வரையான பிரதான பாதையில் பயணிக்கும் புகையிரதங்கள் மற்றும் கண்டி பாதையில் பயணிக்கும் புகையிரதங்கள் கடிகமுவ வரை மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
———————–
Reported by : Sisil.L