மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக தாம் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாக தென் மாகாண தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலைமையினால் உற்பத்திச் செலவில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் தேயிலை உற்பத்தியில் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மின் பிறப்பாக்கிகளைப் பயன்படுத்தி தேயிலைத் தொழிற்சாலைகளை இயக்குவதற்கும் டீசல் தேவை, டீசல் தட்டுப்பாடு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. இந்நிலைமையால் தரமான தேயிலை உற்பத்தி தடைப்பட்டுள்ளதாக தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பசுந்தேயிலைத்தூள் வரத்து குறைந்துள்ளதால் தேயிலைத் தொழிற்சாலைகளின் கொள்ளளவு குறைந்துள்ளதாகவும் தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு விறகு விநியோகம் செய்பவர்களும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு மற்றும் பொதியிடல் பொருள், தேயிலை உரம் உள்ளிட்ட ஏனைய உள்ளீடுகளின் விலை அதிகரிப்பு காரணமாக இலங்கையில் தேயிலை கைத்தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
——————-
Reported by:Anthonippillai.R