எரிபொருள்  தட்டுப்பாடு, மின்வெட்டால் தபால் சேவை பாதிப்பு

தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டால் இலங்கையின் தபால் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலைமை காரணமாக கடிதங்களை விநியோகிப்பது சுமார் ஒரு நாள் தாமதமாகலாம் என பிரதி தபால் மா அதிபரான ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.


இந்த நிலை அடுத்த வாரம் வரை தொடரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


கடிதங்களை தெரிவு செய்தல் மற்றும் தபால் பைகளை செயலாக்கம் செய்யும் நடவடிக்கைகள் இரவிலும் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
——————–

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *