எரிபொருள் கோரி நிரப்பு நிலையம் மீது கல்வீச்சு தாக்குதல்; கல்கமுவவில் சம்பவம்

கல்கமுவ கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையம் கற்களால் தாக்கப்பட்டுள்ளது.


எரிபொருளுக்காக அதிக நேரம்  வரிசையில் காத்திருந்த போதும் எரிபொருள் தீர்ந்துவிட்டதாக அதன் ஊழியர்கள் தெரிவித்ததையடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.


சுகாதாரத் துறை மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு சிறிதளவு எரிபொருள் மட்டுமே மீதம் உள்ளதாக நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஆனால், வரிசையில் நின்றவர்கள் மீதமுள்ள அனைத்து எரிபொருளையும் கேட்டுள்ளனர்.


கடும் வெயில் காரணமாக, அந்தக் கும்பல் எரிபொருள் நிரப்பு நிலையம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.


அதனைத் தடுக்கச் சென்ற பொலிஸாரால், இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட 6 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.
————
Reported by:Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *