ஜேர்மனிக்கு வழங்கப்பட்டு வந்த எரிவாயுவின் அளவை ரஷ்யா பெருமளவில் குறைத்து விட்டது.
ஆற்றலுக்காக மாற்று ஏற்பாடுகளைச் செய்யும் முயற்சியில் ஜேர்மன் சான்சிலர் தீவிரமாக இறங்கியுள்ளார்.
எரிபொருள் விடயத்தில் ரஷ்யா ஜேர்மனியைக் கைவிட்டுள்ள நிலையில், கனடாவுடன் கைகோர்க்க ஜேர்மனி திட்டமிட்டுள்ளது.
ரஷ்யா ஜேர்மனிக்கு வழங்கி வரும் எரிவாயுவை பெருமளவில் குறைத்து விட்டது. அது முற்றிலும் எரிவாயுவை நிறுத்திவிடும் அபாயமும் உள்ளது. ஆகவே, ஆற்றல் தொடர்பில் மாற்று ஏற்பாடுகளைச் செய்வதில் மும்முரமாக இறங்கியுள்ளார் ஜேர்மன் சான்சிலரான ஓலாஃப் ஷோல்ஸ்.
அவ்வகையில், ஆற்றல் தொடர்பில் தற்போது கனடாவுடன் கைகோர்க்க விரும்புகிறது ஜேர்மனி.
ஆகவே, ஜேர்மன் சான்சிலரான ஓலாஃப் ஷோல்ஸும், ஜேர்மன் ஆற்றல் துறை அமைச்சரான Robert Habeckம் நேற்று கனடாவில் மொன்றியலைச் சென்றடைந்தனர்.
அவர்களை கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும், துணைப் பிரதமரான Chrystia Freelandம் வரவேற்றுள்ளார்கள்.
கனடாவிடமிருந்து, திரவ இயற்கை எரிவாயு மற்றும் மின்சார வாகனங்களுக்கான பற்றரிகளில் பயன்படுத்தத் தேவையான நிக்கல் கோபால்ட், லித்தியம் மற்றும் கிராபைட் ஆகிய மூலகங்களைப் பெறுவது தொடர்பில் ஜேர்மன் தலைவர்கள் கனேடிய தலைவர்களுடன் விவாதிக்க உள்ளனர்.
அத்துடன், பசுமை ஹைட்ரஜன் போன்ற புதுப்பிக்கும் ஆற்றல் தொடர்பிலும் ஒத்துழைப்பு நல்குவதன் அடிப்படையில் இரு நாடுகளும் நீண்ட கால ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
——-
Reported by :Maria.S