எதிர்காலத்தில் வருமான வரி அதிகரிக்கப்பட வேண்டும் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (04) விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாகவும், இதன் மூலம் வருமான வரிகள் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“சம்பாதிப்பவர்கள் கொஞ்சம் பணத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், சமுதாயம் சீரழிந்துவிடும்.அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வரி வருமானத்தை சுமார் 15 சதவீதம் அதிகரிக்க வேண்டும்” என்றார்.
கடந்த காலங்களில் வரிகள் அதிகரிக்கப்பட வேண்டிய காலப்பகுதியில் அரசாங்கம் வரிகளைக் குறைத்ததாகவும் அதன் பலனை இன்று அனுபவிக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையிடமிருந்து தற்போது கிடைக்கும் அந்நியச் செலாவணிக் கையிருப்புத் தொகை 50 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவானதே என நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
—————
Reported by : Sisil.L