இலங்கைக்கு அருகிலுள்ள இந்திய-அவுஸ்திரேலிய பீடபூமியில் எதிர்காலத்தில் நிலநடுக்கம் ஏற்படும் என சிரேஷ்ட புவியியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன, இலங்கைக்குள் மட்டுமன்றி இலங்கைக்கு அருகிலும் பெரும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறினார்.
இலங்கையில் நிலநடுக்கங்கள் பற்றிய தகவல்களைப் பெற நான்கு கருவிகள் மட்டுமே உள்ளன என்றும் இது 65ஆயிரம் சதுர கிலோ மீற்றருக்குப் போதுமானதல்ல என்றும் அவர் கூறினார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டாலும், இதுவரை சரியான கவனம் செலுத்தப்படவில்லை என்றார்.
Reported by : Sisil.L