எஎண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் அதிகரித்து வரும் எண்ணெய் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க ஒப்புக் கொண்டுள்ளன.
கொரோனா தொற்றுநோயின் ஆரம்பக் கட்டங்களில் எண்ணெய்க்கான கேள்வி வீழ்ச்சியடைந்ததால் எண்ணெய் விலை குறைந்தது. இதன் காரணமாக, மேற்கண்ட நாடுகள் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தன. ஆனால் இப்போது எண்ணெய்க்கான கேள்வி மெதுவாக அதிகரித்து வருகிறது. ஆனால் உற்பத்தி குறைவாக இருந்ததால், விநியோகம் வீழ்ச்சியடைந்ததால் எண்ணெய் விலை அதிகரித்தது.
இந்த ஆண்டு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 43 சதவீதம் உயர்ந்துள்ளது. உயரும் எண்ணெய் விலைகள் உலகப் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. பல பொருளாதாரங்கள் மீட்கப் போராடுகின்றன. இதற்கு தீர்வாக, எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தங்கள் உற்பத்தியை அதிகரித்து, விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்த முடிவை ஒபெக் நாடுகளும் அவற்றின் பங்காளி ரஷ்யாவும் எடுத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, அவை அடுத்த மாதம் (ஓகஸ்ட்) முதல் உற்பத்தியை அதிகரிக்கும். விநியோகம் ஒரு நாளைக்கு இரண்டு மில்லியன் பீப்பாய்களால் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
—————-
Reported by : Sisil.L