எக்ஸ்பிரஸ் பேர்ள் பாதிப்புக்காக இலங்கைக்கு 3.6 மில்லியன் டொலர் இழப்பீடு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றிய அனர்த்தத்தினால் இலங்கைக்கு ஏற்பட்ட  சுற்றுச்சூழல் பாதிப்புக்காக 3.6 மில்லியன் டொலர் இழப்பீடு கிடைத்துள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

 
இந்நிதியில் 2 மில்லியன் டொலர் மீனவர்களுக்கு வழங்கப்படும் எனவும்  மீதித்தொகையில் ஒரு பகுதியை கடல் சுற்றுச்சூழல் அதிகார சபை பெற வேண்டும் எனவும் அதன் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹன்தபுர தெரிவித்தார்.
————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *