ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனைக்கு வெண்டிலேட்டர் கருவி உட்பட சுமார் 81 இலட்சம் ரூபா பெறுமதி யான மருத்துவ உபகரணங்கள் அமெரிக்காவிலுள்ள சுருவில் சவரிமுத்து பௌண்டேசனால் வழங்கப்பட்டது.
இந்த உபகரணங்கள் நேற்று முன்தினம் ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையின் அத்தியட்சகர் மருத்துவர் யோ. யதுநந்தனிடம் அன்பளிப்பு செய்யப்பட்டன.
ஊர்காவற்றுறை – சுருவிலைச் சேர்ந்த சவரிமுத்து ஞாபகார்த்தமாக அவரின் குடும்பத்தினர் தமது சொந்த நிதியில் இந்த மருத்துவக் கருவிகளை அன்பளிப்பு செய்தனர்.
இந்த நிகழ்வில் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி ஜெயக்குமார் அடிகளார் உத்தியோகபூர்வமாக கலந்து கொண்டு சவரிமுத்து பௌண்டேசன் சார்பில் இந்த உதவிகளைக் கையளித்துள்ளார்.
—————–
Reported by : Sisil.L