ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை நோயாளர்களுக்கு மருந்துகள் அன்பளிப்பு

யாழ். ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் நலன் கருதி இலங்கை செஞ்சிலுவைச் சங்க யாழ். கிளையினூடாக ஒரு தொகுதி மருந்துகளும் மேலும் அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்காக சிவநந்தி அறக்கட்டளை ஊடாக ஒரு இலட்சம் ரூபாவும் கனகம்மா அறக்கட்டளை ஊடாக 2 இலட்சம் ரூபாவுக்கான காசோலைகளும் வழங்கப்பட்டிருந்தன.


 நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்க யாழ். கிளைத் தலைவர், பொருளாளர், உறுப்பினர்கள் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச செயலர், வைத்திய நிபுணர், வைத்தியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தற்போது காசோலைகளுக்கான மருந்துகளும் கொள்வனவு செய்யப்பட்டு சிகிச்சைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.

 
மேற்படி அன்பளிப்பை வழங்கிய இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் யாழ் கிளை மற்றும் சிவநந்தி அறக்கட்டளை, கனகம்மா அறக்கட்டளை ஆகியவற்றுக்கு வைத்தியசாலை நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது.
————
Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *