உலகில் கடல் மட்டம் ஆண்டுக்கு 3.1 மி.மீற்றர் உயர்வதாகத் தகவல்

உலகளவில் கடல் மட்டம் ஆண்டுக்கு 3.1 மில்லிமீற்றர் என்ற அபாயகரமான அளவில் உயர்ந்து வருவதாக ஐரோப்பிய ஆணையகத்தின் கீழ் இயங்கும் கொப்பர்நிக்கஸ் மரைன் சேவிஸ் கட்டுரை வெளியிட்டுள்ளது.

 
கடல்கள் வெப்பமயமாவதாலும் நிலப்பரப்பு உருகுவதும் கடல் மட்டம் உயர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நூற்றாண்டின் எந்த நேரத்திலும் காணப்பட்டதை விட அதிகமாகும் என்றும் அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

 
1979 முதல் 2020 வரை ஆர்டிக் பகுதியில் உருகிய பனி ஜெர்மனியின் பரப்பை விட ஆறு மடங்கு அதிகம் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *