உலகில் வைரங்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஆபிரிக்க நாடான பொட்ஸ்வானாவும் ஒன்று.உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905ஆம் ஆண்டு தென் ஆபிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 3,106 கரட் அளவு கொண்டதாகும்.
அதற்கு அடுத்தபடியாக, இரண்டாவது மிகப்பெரிய வைரம் பொட்ஸ்வானா நாட்டில் 2017ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 1,109 கரட் அளவு ஆகும்.
இந்நிலையில், 1,098 கரட் அளவுடன் உலகின் 3ஆவது பெரிய வைரம் பொட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 73 மில்லி மீற்றர் நீளம், 52 மில்லி மீற்றர் அகலம், 27 மில்லி மீற்றர் பருமனும் கொண்டுள்ள இந்த வைரக்கல் கடந்த 1ஆம் திகதி அரசு துணையுடன் இயங்கும் டப்ஸ்வானா என்ற நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட வைரத்தை பொட்ஸ்வானா அதிபர் மோக்விட்சி கையில் வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
பல கோடி ரூபா மதிப்புள்ள இந்த வைரக்கல்லை கொரோனா வைரஸ் காலம் முடிவடைந்த பின்னர் ஏலம் விட பொட்ஸ்வானா அரசு திட்டமிட்டுள்ளது.
வைரத்தை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொரோனாவுக்குப் பிந்தைய நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
————–
Reported by : Sisil.L