பணி-வாழ்க்கைச் சமநிலையான உலகின் மிகச் சிறந்த நகரங்களின் வரிசையில் மூன்று கனேடிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.
ஒட்டாவா, வன்கூவர் மற்றும் றொரன்டோ ஆகிய நகரங்கள் இவ்வாறு குறித்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
2022ஆம் ஆண்டுக்கான பணி – வாழ்க்கைச் சமநிலை சுட்டி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பணி மற்றும் வாழ்க்கைக்கு இடையில் மிகச் சிறந்த சமநிலையை தங்களது பிரஜைகளுக்கு வழங்கும் நகரங்கள் எவை என்பது குறித்து ஆய்வு நடாத்தப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்படுகின்றது.
அமெரிக்காவின் 51 நகரங்களும் உலகின் ஏனைய நாடுகளிலிருந்து 49 நகரங்களும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
பணிச்சுமை, நகர வாழ்க்கை, உலக் சுகாதாரம், விடுமுறை நாட்கள், கலாசார மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள், வீட்டு வசதி போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் நோர்வேயின் ஒஸ்லோ முதல் இடத்தையும், சுவிட்சர்லாந்தின் பேர்ன் இரண்டாம் இடத்தையும், பின்லாந்தின் ஹெல்சிங்கி மூன்றாம் இடத்தையும் வகிக்கின்றன.
கனடாவின் ஒட்டாவா 7ஆம் இடத்தையும், வன்கூவர் 16ஆம் இடத்தையும், றொரன்டோ 19ஆம் இடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
————————
Reported by: Anthonippillai .R