உலகளவில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு(FAO) தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும், உணவுப் பொருட்களின் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது, இது ஒரு தசாப்தத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச உணவு விலை என்று அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் தானியங்கள் மற்றும் தாவர எண்ணெய் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. கடந்த மாதத்தில் மட்டும் தாவர எண்ணெய் விலை 10% அதிகரித்துள்ளது.
விநியோகச் சங்கிலியின் சரிவு, தொழிற்சாலைகள் மூடல், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, உலக அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி போன்றவற்றையும் அவை சுட்டிக்காட்டுகின்றன.
கடந்த 12 மாதங்களில் கோதுமை மாவின் விலை சுமார் 40 வீதத்தால் அதிகரித்துள்ள அதேவேளை, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தானியங்களின் விலை 22 வீதத்தால் அதிகரித்துள்ளது.
———————-
Reported by : Sisil.L