நாட்டின் கிழக்குப் பகுதியில் அதிகரித்துள்ள பதற்றங்களுக்கு மத்தியில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) ஞாயிற்றுக்கிழமை உடனடி போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ரஷ்யா மற்றும் ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பு (OSCE) ஆகியவற்றுடன் உக்ரைன் பங்கேற்கும் முத்தரப்பு தொடர்புக் குழுவுக்குள் அமைதிப் பேச்சுக்களை உக்ரைன் ஆதரிக்கிறது என்றும் அவர் கூறினார்.
குறித்த பகுதிகளில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் உக்ரைன் படைகளுக்கும் இடையிலான மோதல்கள் சமீபத்திய நாட்களில் தீவிரமடைந்துள்ளன.
இந் நிலையிலேயே உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மேற்கண்ட அழைப்பை விடுத்துள்ளார்.
————————
Reported by : Sisil.L