ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து உக்ரைனிலிருந்து 50 ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் வாடகை வாகனங்கள் மூலமாகவும், நடந்து சென்றும் உக்ரைன் எல்லையைக் கடந்து ரூமேனியா, போலந்து உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இதன்படி 2 நாட்களுக்குள்ளே உயிருக்கு அஞ்சி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருவதாக ஐ.நா. அகதிகளுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.
—————–
Reported by : Sisil.L