உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் போர் தொடுக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இன்று போர் தொடுக்கும், நாளை போர் தொடுக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்து வருகிறார். பெரும்பாலான நாடுகள் தங்களுடைய தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்த வண்ணம் உள்ளன.
நாட்டு மக்களையும் வெளியேற அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனிலுள்ள இந்தியத் தூதரகம், உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள், மாணவர்கள் தற்காலிகமாக வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளது. உக்ரைனில் தங்கியிருப்பது கட்டாயமில்லை எனக் கருதும் நபர்கள் வெளியேறவும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், மாணவர்கள் சிறப்பு விமானத்திற்கான அப்டேட் குறித்து தெரிந்துகொள்ள மாணவர்களுக்கான தொடர்பு கொள்பவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் எனவும், தூதரகத்தின் பேஸ்புக், இணையத்தளம், டுவிட்டர் தொடர்ந்து பார்க்கவும் அறிவுறுத்தியுள்ளது. தொடர்பு கொள்வதற்கு வசதியாக 24 மணி நேரமும் செயற்படும் உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 22, 24 மற்றும் 26ஆம் திகதிகளில் உக்ரைனில் இருந்து சிறப்பு விமானம் இயக்கப்படவுள்ளது.
Reported by : Sisil.L