ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வந்த தென் னாபிரிக்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் இப்ரா ஹிம் இஸ்மாயில் இப்ராஹிம் காலமானார்.
இந்திய வம்சாவழியினரான இவர், நேற்று தனது 85ஆவது வயதில் காலமானார். சர்வதேச உறவுகளுக்கான பிரதி அமைச் சராக இருந்த இவர் சர்வதேச ரீதியாக தமிழர் பிரச்சினை தொடர்பாக இடம்பெற்ற பல பேச்சுகளிலும் பங்கேற்றிருந்தவர்.
1990களில் இலங்கை வந்த அவர், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஈழத் தமிழர் விடயம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். 1998ஆம் ஆண்டு தென்னாபிரிக்க பாராளுமன்றக் குழுவுடன் இலங்கை வந்த அவர் யாழப்பாணத்துக்கும் விஜயம் செய் திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் உறுப்பினரான இப்ராஹிம் நிற வெறி அரசாங்கத்துக்கு எதிராகப் போராடியவராவார். இதற்காக அவர் ராபன் தீவுச் சிறையில் 15 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்தார். 1994இல் நிறவெறி அர சாங்கம் முடிவுக்கு வந்த பின்னர் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
———-
Reported by : Sisil.L