இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் உயிரிழந்தனரென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களில் 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட 03 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 12 பேரும் அடங்குவரென அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளது.
30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் 01 ஆணும் 02 பெண்களும் அடங்குவதாகவும் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 07 ஆண்களும் 05 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, இலங்கையில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,841 ஆக அதிகரித்துள்ளது.
————-
Reported by : Sisil.L