இலங்கையில் மேலும் 10 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 706 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்ட 10 மரணங்களில் 3 பெண்களும், 7 ஆண்களும் உள்ளடங்குகின்றனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.
———————
Reported by : Sisil.L