இலங்கையில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ரயில் சேவைகள்

சுகாதார ஆலோசனை காரணமாக இடை நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களும் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜெயசுந்தர இன்று(7) ஊடகங்களுக்கு அளித்த விஷேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 
ஒக்டோபர் 1ஆம் திகதி ரயில்களை இயக்கத் தயாராக இருந்தோம். ஆனால் கொரோனா சூழ்நிலையால் இரு வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு எமக்கு தெரிவிக்கப்பட்டது.

 
குருநாகல், வெயாங்கொட,பாணந்துறை ரயில் நிலையங்களிலிருந்து அதிகளவான அலுவலக ரயில்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 
கொரோனா இல்லாத காலத்தில் ரயில்வே திணைக்களத்துக்கு மாதம் 500 மில்லியன் ரூபா வருமானம் இருந்தது. அந்த வருவாயை தற்போது நாம் இழந்து விட்டோம் என அவர் மேலும் கூறினார்.
————-

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *