கொவிட் இறப்புகளில் 75வீதமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தொற்று நோயியல் பிரிவு கூறுகிறது.24 சதவீதம் பேர் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள், 1.2 சதவீதம் பேர் 30 வயதுக்குட்பட்டவர்களாவர். கொவிட் -19 நோய்த்தொற்று காரணமாக இறந்தவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் என்றும் தொற்றுநோயியல் பிரிவு கூறுகிறது.
ஜூலை 20ஆம் திகதி கொவிட் தொற்று காரணமாக 47 பேர் இறந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்று காரணமாக ஏற்பட்ட மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 3,917 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டில் மொத்த கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 289,577 ஆக அதிகரித்துள்ளதென தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் நேற்று 1,566 புதிய கொவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
———————–
Reported by : Sisil.L