இலங்கையின் கொவிட் நிலைமையை தீர்மானிப்பதில் அடுத்த சில வாரங்கள் மிகவும் முக்கியமானவை என தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித் கினிகே தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா நிலவரம் கட்டுப்பாட்டு நிலைக்குள் உள்ள போதிலும் இலங்கை வைரஸில் இருந்து பாதுகாப்பாக உள்ளது என்பது இதன் அர்த்தமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் இன்னமும் ஆபத்திலிருந்து மீளவில்லை எனவும் ஒமிக்ரோன் நாட்டிற்குள் நுழைவதை தடுக்க மாத்திரமே முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அலட்சியமாக இருந்தால் இலங்கையில் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதைக் காண நேரிடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் முன்கூட்டியே தயாராக வேண்டும்,பூஸ்டர் டோஸை பெறுவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Reported by : Sisil.L