கொவிட்19 வைரஸுக்கு எதிரரான இலங்கையின் முயற்சிக்கு ஆதரவாக சிரிஞ்சுகள் மற்றும் பிற அத்தியாவசிய உபகரணங்களைக் கொள்வனவு செய்ய கனடா 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
இந்த உதவி உலக சுகாதார அமைப்பின் மூலம் கிடைத்துள்ளது.
தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு சரியான நேரத்தில், அத்தியாவசியமான, நெகிழ்வான ஒத்துழைப்பை வழங்கும் பலதரப்பு அமைப்பின் மூலமான ஒத்துழைப்புக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று கொழும்பிலுள்ள கனடிய உயர் ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளது.
————
Reported by : Sisil.L