இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ் . சாலை ஊழியர்கள் நேற்றுத் திங்கட்கிழமை காலை முதல் பணிப்புறக் கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று வடக்கு மாகாணம் முழுமையும் மேற்கொள்ளப்பட்டு அனைத்து இ.போ.ச பேருந்துகளும் பணியில் இருந்து விலகியுள்ளன.
சரி ஏன் இந்த பணிப்புறக்கணிப்பு..?
வசாவிளான் பகுதியில் இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ் மோதியதில் மாணவன் ஒருவன் அண்மையில் காயமடைந்தான்.இதையடுத்து சாரதியொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது . இந் நிலையில் தாக்கிய நபர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தாக்கிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலைக் கண்டித்தே நேற்று முதல் பணிப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இன்று வடமாகாணம் முழுமையும் இந்த பகிஸ்கரிப்பு விரிவாக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று காலை முதல் தனியார் பேருந்துகளில் சனநெரிசலான வகையில் மாணவர்களும் – தொழிலுக்கு செல்வோரும் – வேறு மாவட்டங்களுக்கு பணிக்கு செல்வோரும் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது முன்பாகவே அறிவிக்கப்பட்டிருந்தால் கூட வேறு ஆயத்தங்களை பலராலும் மேற்கொண்டிருக்க முடியும். ஆனால் திடீரென பணிப்பகிஷ்கரிப்பு என அறிவித்தால் சீசன் டிக்கெட்டுகள்களை நம்பி பயணப்படுவோரின் நிலை என்ன..? தனியார் பேருந்துகள் மட்டும் சேவையில் இருந்தால் பெட்ரோல் நெருக்கடியால் உள்ளதே பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. அரச பேருந்துகளும் இயங்காவிட்டால் தனியார் பேருந்துகளில் சன நெருக்கடி எவ்வாறானதாக இருக்கும்..? அந்த கூட்ட நெரிசலில் சிக்கி சென்று வேலைகளை ஊழியர்களால் செய்ய முடியுமா
Reported by :Maria.S