இலங்கையில் தடுப்பூசி திட்டங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்த 150 மில்லியன் டொலர் கடனைப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இக்கடன் ஒப்பந்தத்தில் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பணிப்பாளர் சென்சென் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
தடுப்பூசிகளுக்கான செலவு, தடுப்பூசி அடிப்படையிலான கண்காணிப்பு பொறிமுறைகளை நிறுவுதல், குளிரூட்டப்பட்ட போக்குவரத்து வசதிகள் மற்றும் மருத்துவ கழிவு முகாமைத்துவம் ஆகிய நடவடிக்கைகளுக்கு இந்தக் கடன்கள் ஈடுகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
—————————-
Reported by : Sisil.L