ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூப ஜனாதிபதி Miguel Díaz-Canel-ஐ சந்தித்துள்ளார்.
இதன்போது, கியூபாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல உடன்பாடுகள் எட்டப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
G77 சீன அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கியூபா சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அந்நாட்டு ஜனாதிபதி Miguel Díaz-Canel வரவேற்றார்.
கியூபாவுக்கு எதிரான தடைகளை நீக்குமாறு கோரும் ஐக்கிய நாடுகளின் தீர்மானத்திற்கு இலங்கை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆதரவளித்து வருவதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் சுகாதாரம், விவசாயம் , விளையாட்டு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பிலும் இருநாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
அடுத்த வருடத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூப ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை, G77 அரச தலைவர்களின் மாநாடு கியூபாவின் ஹவானா நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
Reported by :N.Sameera