இலங்கை உட்பட 5 நாடுகளின் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை மலேசியா தளர்த்தியுள்ளது.
இதன்படி நிரந்தர வதிவிட அஸ்தஸ்து, நீண்ட கால பாஸ், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகியோர் குறித்த 5 நாடுகளிலிருந்து மலேசியாவுக்குள் நுழையலாம்.
மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி முதல் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இந்தியா, இலங்கை. பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக மலேசியாவின் குடிவரவு இயக்குநர் நாயகம் கைருல் டைமி தாவூத் தெரிவித்தார்.
இவ்வாறு வருகை தருவோர் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருத்தல் வேண்டும். நாட்டுக்கு வந்ததும் கொவிட்-19 சோதனைக்குள்ளாக வேண்டும். மேலும் நாட்டில் புதிய திரிபுகள் பரவுவதைத் தடுக்க சுகாதார அமைச்சால் சகல வெளிநாட்டவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என குறித்த 5 நாடுகளின் தூதரகங்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை அனைத்து நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கான தடை மலேசியாவில் இன்னும் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
————–
Reported by : Sisil.L