இராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகுகிறார் சவேந்திர சில்வா

ஜூன் 01 முதல் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதி பதவியில் இருந்து நீக்கி பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தற்போதைய இராணுவ தலைமை அதிகாரியான விக்கும லியனகே புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்படவுள்ளார்.


நாடு முழுவதும் மே 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தைத் தொடர்ந்து, தற்போதைய பொலிஸ் மா அதிபர்  மற்றும் இராணுவத் தளபதியை பதவியிலிருந்து நீக்குமாறு பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
———————
Reported by:Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *