கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸானது இன்று முதல் வழங்கப்படவுள்ளது.
தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளத் தகுதியான அனைவருக்கும் குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்படும் என கொழும்பு மாநகர சபையின் பிராந்திய தொற்றுநோய் நிபுணர் மருத்துவர் தினுக குருகே தெரிவித்தார்.
பொது மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், தேவையற்ற பொதுக் கூட்டங்களை உருவாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்,
மேலும் அனைவருக்கும் போதுமான தடுப்பூசிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இரண்டாவது தடுப்பூசியைப் பெற்று மூன்று மாதங்கள் முடிந்தவர்களுக்கே பூஸ்டர் டோஸ் வழங்கப்படுகிறது.
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகங்கள் ஊடாகவும் பூஸ்டர் டோஸானது வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Reported by : Sisil.L