இத்தாலியில் தனது இரு மகள்களையும் கொன்ற இலங்கைத் தாய்!

இத்தாலியின் வெரோனா பகுதியில் இலங்கைத் தாய் ஒருவர் தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 33 வயதுடைய  சச்சித்ரா நிசன்சலா பெர்னாண்டோ தேவ்த்ரா மஹவடுகே என்பவர்  தனது சாபதி(11 வயது) மற்றும்  சாந்தினி (03 வயது) மகள்களுடன் ஜனவரி மாதம் முதல் இத்தாலியின் வெரோனா நகரில் வசித்து வந்துள்ளார்.


அதன்படி, 3 மற்றும் 11 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளே இவ்வாறு கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


குறித்த சம்பவத்தில் இரண்டு சிறுவர்களும் படுக்கையறையிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.


போர்டோ சான் பான்கிராசியோ மாவட்டத்தில் உள்ள வெரோனா நகராட்சியின் பெண்கள் காப்பகத்திலேயே குறித்த  சம்பவம் இடம்பெற்றுள்ளது.


உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் பிரிந்து வாழ்வதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் தாய் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவரா? என்பது குறித்து இத்தாலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *