வடபகுதிக்கான விஜயத்தின் பின்னர் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் இது ஆரம்பம் மாத்திரமே எனத் தெரிவித்துள்ளார்.இந்த விஜயத்தின் முடிவு இது என்ற போதிலும் இது ஓர் ஆரம்பமாகும் என சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.எதன் ஆரம்பம் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
வட மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் இலங்கை கடற்பரப்பிற்குள் அமைந்துள்ள இராமர் பாலத்தின் மணல் திட்டுக்களைப் பார்வையிட்டுள்ளார்.
மன்னார் தாழ்வுபாடு வழியாக கடற்படைக்குச் சொந்தமான விரைவுப் படகின் மூலம் இராமர் பாலத்தின் மணல் திட்டுகள் வரை பயணித்து அவற்றை அவர் பார்வையிட்டார்.
இலங்கை கடற்பரப்பிலுள்ள இராமர் பாலத்தின் மூன்றாவது மணல் திட்டு வரை பயணித்தனர்.
மன்னார் மாவட்டம் தாழ்வுபாட்டில் இருந்து ஒரு மணி நேர பயணத்தின் போது 17 கடல் மைல் தூரம் பயணித்தே அந்த இடத்தை அடைந்தனர்.
—————-
Reported by : Sisil.L