ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 14ஆம் திகதி முதல் அங்குள்ள தனது குடிமக்களை அமெரிக்கா வெளியேற்றி வருகிறது.
திங்கட்கிழமை காலை தொடங்கி நேற்றுக் காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், மிக அதிகளவாக 21 ஆயிரத்து 600 பேரை வெளியேற்றி இருக்கிறது. 37 அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் 12 ஆயிரத்து 700 பேரும், நட்பு நாடுகளின் விமானங்கள் மூலம் 8 ஆயிரத்து 900 பேரும் மீட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, 16 ஆயிரம் பேர் அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மக்களை வெளியேற்றும் பணியை 31ஆம் திகதிக்குள் முடிக்க வேண்டும், கெடு நீட்டிப்பு கிடையாது என்று தலிபான்கள் கூறிவிட்டதால், மீட்புப் பணியை அமெரிக்கா விரைவுபடுத்தி உள்ளது.
Reported by : Sisil.L