உலகின் கவனத்தை ஈர்த்த ஆப்கானின் பெண்கள் ரொபோட்டிக் அணியை சேர்ந்தவர்கள் கட்டாரில் பாதுகாப்பாக உள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானின் பெண்கள் ரொபோட்டிக் அணியை யுவதிகள் கடுமையான போராட்டத்தின் பின்னர் கட்டார் சென்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையை கட்டார் அரசாங்கம் மேற்கொண்டது விசாக்களை வழங்கியதுடன் விமானமொன்றை அனுப்பியது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் 2017 இல் இடம்பெற்ற சர்வதேச ரொபோட்டிக் போட்டியில் விசேட விருதினை பெற்றதன் மூலம் ஆப்கானின் பெண்கள் ரொபோட்டிக் அணியினர் உலகின் கவனத்தை ஈர்த்தனர்.
ஆப்கானிஸ்தான் பெண்களின் கல்வித்திறனிற்கான ஓர் உதாரணமாக அவர்கள் புகழப்பட்டனர்.
அணியில் இடம்பெற்றிருந்த 15 முதல் 19 வயதான யுவதிகளும் அவர்களின் ஆசிரியரும் கட்டார் சென்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
காபுல் தலிபானின் கரங்களுக்கு செல்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவைச் சேர்ந்த டிஜிட்டல் சிட்டிஜன் பன்ட் என்ற அமைப்பு கட்டார் அரசாங்கத்தின் உதவியை நாடியது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காபுலை தலிபான்கள் கைப்பற்றப் போகின்றனர் என்ற தகவல் கிடைத்ததும் நாங்கள் கட்டார் வெளிவிவகார அமைச்சின் உதவியை நாடினோம், விசாக்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டோம் என அமெரிக்காவைச் சேர்ந்த டிஜிட்டல் சிட்டிஜன் பன்டின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Reported by : Sisil.L