அவசர நிலை சட்டம் ரத்து -கனடா அறிவிப்பு

கொரோனா தொற்றுப் பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 
 அமெரிக்காவிலிருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லொறிச் சாரதிகளுக்கு தடுப்பூசி கட்டாயம். தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படு வார்கள் என அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து லொறிச் சாரதிகள் ஒட்டாவாவில் உள்ள முக்கிய வீதிகளில் லொறிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
 
இதற்கிடையே, போராட்டத்தை ஒடுக்கும் விதமாக கடந்த 15ஆம் திகதி நாடுமுழுவதும் அவசரநிலை சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். போராட்டக்காரர்களின் லொறிகள், அவர்கள் அமைத்திருந்த தற்காலிக கூடாரங்களை பொலிஸார் அப்புறப்படுத்தியதால் அங்கு ஏற்பட்டிருந்த அமைதியற்ற சூழல் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், லொறிச் சாரதிகளின் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, கனடாவில் அவசர நிலை பிரகடனம் ரத்து செய்யப்படுகிறது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *