அரசியலமைப்பிற்கு முரணாக சட்டங்களை நடைமுறைப்படுத்துவோருக்கு எதிராக தமது ஆட்சியின் கீழ் தண்டனை வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
கொழும்பு மாளிகாவத்தையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டார்.
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தவர்களை கண்டறியுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முடியுமானால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைபேசியை ஆராயுமாறு பொலிஸாரிடம் கேட்டுக்கொள்வதாகவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தேர்தலுக்கு நிதி வழங்குவதாக வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், தற்போது நிதியை பெற்றுக்கொடுக்க முடியாதென திறைசேரியினால் தெரிவிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.
தேர்தலுக்கு நிதி வழங்காமல் இருப்பது குற்றமெனவும் அதற்கு 3 வருட சிறைதண்டனை வழங்கப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.தெரிவத்தாட்சி அதிகாரிகளை கட்டுப்பணம் ஏற்க வேண்டாமென தெரிவித்த செயலாளருக்கு எதிராகவும், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் போது உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென தேசிய மக்கள் சக்தியின் தலைவர் மேலும் கூறினார்.
Reported by :Maria.S