சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து சாதகமான பதில் கிடைத்தவுடன் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு பில்லியன் டொலர் கடன் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, மார்ச் மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவி கிடைக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவையை மாற்றுமாறு ஜனாதிபதிக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அமைப்புகள் கோரியுள்ளன.
இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, விளையாட்டு, நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, ஊடகத்துறை, துறைமுகம், தொழில் அமைச்சுப் போன்ற பதவிகளில் மாற்றம் ஏற்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Reported by:Maria.S
.