அநுராதபுர சிறைசாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட அராஜகம் ஓர் அப்பட்டமான இனவாதம் ஆகும் எனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இதற்கு எதிராக தற்போது எழுந்து நிற்காவிட்டால் இனவாதம் கட்டுப்படுத்த முடியாதபடி எல்லை மீறிப் போய்விடும் என எச்சரித்துள்ளார்.
செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
“ அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த அராஜகம் ஓர் அப்பட்டமான இனவாதம் ஆகும்.
இந்த இனவாத அடக்குமுறை தமிழருக்கு எதிரானதாகத் தொடங்கி பின்னர் முஸ்லிம்களுக்கும் எதிரானதாக இப்போது உருமாறி இறுதியில் தமக்கு எதிரான தன் சொந்த சிங்கள மக்களுக்கு எதிரானதாக உருமாறும். இது ஒரு புற்று நோய் போன்றது. இதை அழிக்காவிடின் இது பரவிக்கொண்டே போகும். அது தான் இன்று இந்த நாட்டில் நடக்கிறது.
நேர்மையாக சிந்திக்கக் கூடிய அனைத்து இன மக்களும் இதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு எதிராக இப்போது எழுந்து நிற்காவிடின் இனி எப்போதும் அடக்க முடியாத அளவுக்கு இனவாதம் எல்லை மீறிப் போய்விடும்.”
——————
Reported by : Sisil.L