அடுத்த மாதம் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக நியூஸிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டன்(Jacinda Ardern) தெரிவித்துள்ளார்.
கட்சியின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த அறிவிப்பை வௌியிட்டார்.
நியூஸிலாந்தின் பொதுத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பிரதமரின் இராஜினாமா அறிவிப்பு வௌியாகியுள்ளது.
ஜெசின்டா 2017ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற போது, உலகின் இளைய பெண் அரசாங்கத் தலைவராக பதிவானார்.
Reported by :Maria.S