அச்சுத்தாள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் இரண்டு பத்திரிகைகள் தங்கள் அச்சுப்பதிப்புகளை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளன.
இந்த அறிவிப்பை அவற்றின் உரிமையாளர் இன்று வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் நிதிப்பேரிடருக்கு புதிதாக பலியாகியுள்ளவையாக இந்தப் பத்திரிகைகள் காணப்படுகின்றன.
22மில்லியன் சனத்தொகையைக் கொண்ட தென்னாசிய நாடு 1948ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் மிக மோசமான நிதி பொருளாதாரநெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்புகள் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு குறைவாக காணப்படுகின்ற நிலையிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
உபாலி நியுஸ்பேப்பர்ஸ் நிறுவனம் ( தனியார்) தமது ஆங்கில நாளிதழான ஐலண்டையும் திவயினவையும் ஒன்லைன் மூலம் மாத்திரம் வாசிக்க முடியும் – அச்சுத்தாள் தட்டுப்பாடே இதற்குக் காரணம் என அறிவித்துள்ளது.
—————————
Reported by : Sisil.L