QR முறைமையை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பலவற்றின் சேவைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலை அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, எரிபொருள் முன்பதிவு மற்றும் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நேற்று வரை இலங்கை மின்சார சபைக்கு வழங்க வேண்டிய 105 பில்லியன் ரூபாவை வசூலித்தல், தொடர்ந்து எரிபொருளை விநியோகித்தல் மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்தது.
Reported by :Maria.S