பெற்றோல் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் தொடரும் பட்சத்தில் அனைத்து வரிசைகளையும் ஒரு வார காலத்துக்குள் முடித்துவிட முடியும் என பெற்றோலிய பிரிவினர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீட்டு முறைமையின்படி வெற்றிகரமாக எரிபொருள் விநியோகம் செய்யப்பட்ட போதிலும் 1200 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 800 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரமே தொடர்ச்சியாக எரிபொருள் கிடைப்பதாக சங்கத்தின் செயலாளர் கபில நாஓதுன்ன குறிப்பிடுகின்றார்.
புதிய முறையின் மூலம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து சட்டவிரோதமாக எரிபொருளை விடுவிப்பது கட்டுப்படும் எனவும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இந்த முறைப்படி அனைத்தையும் செய்வதற்குத் தயாராக உள்ள போதிலும் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒவ்வொரு இந்தியன் எண்ணெய் நிறுவன எரிபொருள் நிரப்பு நிலையமும் ஒரே நேரத்தில் 19,800 லீற்றர் எரிபொருளைப் பெறும்போது, ஒரு சிபெட்கோ நிரப்பு நிலையம் ஒரு நேரத்தில் 6,600 லீற்றர் மட்டுமே பெறுகிறது என்று அவர் மேலும் கூறுகிறார்.
————–
Reported by :Maria.S