சவூதி அரேபியாவில் சில கட்டுப்பாடுகளுடன் வலன்டைன்ஸ் டே கொண்டாட அனுமதி

உலகம் முழுவதும் இன்று வலன்டைன்ஸ் டே எனப்படும் காதலர் தினம் பல நாடுகளில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. 90களில் மேலை நாடுகளில் மட்டுமே பிரபலமாக இருந்த இந்தத் தினம் தற்போது ஆசிய நாடுகள் மத்திய தரைக்கடல் நாடுகளிலும் பிரபலமாகி வருகிறது. கட்டுப்பாடுகள் நிறைந்த இஸ்லாமிய நாடுகளிலும் இந்தத் தினம் பிரபலமாகி வருவதால் காதலர்கள் வீதி எங்கும் உலா வர தொடங்கி விட்டனர். இவர்களை கவர்வதற்காக உலக நாடுகளில் வியாபாரிகள் பலர் காதலைக் கொண்டாடும் பல பொருட்களை விற்பனை […]
காரில் பயணித்த லிபியப் பிரதமரை சுட்டுக் கொல்ல முயற்சி!

லிபியா நாட்டின் பிரதமர் அப்துல் ஹமீத் அல் திபய்பா காரில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவரது கார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பினர். லிபியப் பிரதமர் நேற்று தலைநகர் திரிபோலியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவர் கார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பினர். இந்த கொலை முயற்சியில் அவர் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவில் உள்நாட்டுப் […]
ரஷ்யா – பெலாரஸ் கூட்டு இராணுவ பயிற்சி

உக்ரேனின் எல்லைகளில் ரஷ்யப் படைகள் குவிக்கப்படுவதைப் பற்றிய கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யாவும் பெலாரஸும் 10 நாட்கள் கூட்டு இராணுவப் பயிற்சியைத் தொடங்கவுள்ளன. இந்நிலையில் இந்த பயிற்சி நடவடிக்கையானது உக்ரேன் மீதான பற்றத்தை மேலும் அதிகரிக்கும் செயற்பாடு என வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது. இதன்படி எல்லையில் 100,000 இராணுவ வீரர்களைக் குவித்துள்ள போதிலும், உக்ரேன் மீது படையெடுப்பதற்கான எந்தவொரு திட்டத்தையும் ரஷ்யா மீண்டும் மீண்டும் மறுத்து வருகின்றது. எனினும் ரஷ்யாவின் தாக்குதல் எந்த நேரத்திலும் வரலாம் என […]
நிரந்தர வதிவிட விசாவுக்கு பஹ்ரைன் அழைப்பு

பஹ்ரைன் நாடு பல்வேறு திறமைகளைக் கொண்ட தனி நபர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு தங்கள் நாட்டில் நிரந்தர வதிவிடத்துக்கான வாய்ப்புகளை வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கமைய புதிய ‘நிரந்தர குடியிருப்பு விசா’ வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் மூலம் திறமையான தொழிலாளர்களையும் முதலீட்டையும் தங்கள் நாட்டுக்கு ஈர்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என அவர்கள் கூறுகிறார்கள்.தற்போது வரை, நாட்டுக்கு வேலைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு ஆண்டுதோறும் பணி விசாவை நீட்டிக்கும் நடைமுறை வழக்கத்திலுள்ளது. இது அவர்கள் நாட்டில் நீண்ட காலம் […]
கனேரி தீவில் படகு கவிழ்ந்த விபத்தில் 16 பேர் மாயம்

ஸ்பெயினில் உள்ள கனேரி தீவுக் கடலில் படகு கவிழ்ந்ததில் 16 குடியேற்றவாசிகள் மாயமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக ஸ்பெயின் நாட்டுக்குள் சட்ட விரோதமாக நுழைய முற்பட்ட 58 பேர் கொண்ட படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்திலிருந்து 41 நபர்களை கடலோர காவல்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.மேலும் உயிரிழந்த ஒருவரது சடலத்தையும் மீட்டுள்ளனர். இந்த நிலையில் படகு நெரிசல்களுக்கு மத்தியில் பயணம் செய்ததால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் காணாமல் போன 16 அகதிகளைத் தேடும் பணி […]
ஜப்பானில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் அதிகரிப்பு

ஜப்பானில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் 2021-ல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக புள்ளி விபரம் தெரிவித்துள்ளது. இதற்கு கொரோனா வைரஸ் தொற்று ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. கட்டுப்பாடுகள் அதிகரிப்பால் குழந்தைகள் நல காப்பகத்தை அடிக்கடி ஆய்வு செய்ய முடியாத நிலையும் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. 2021-ல் குழந்தைகளுக்கு எதிராக துன்புறுத்தல் வழக்குகள் 1.7 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து 8 ஆயிரமாக உயர்ந்துள்ளன. இதில் உணர்வுபூர்வமான தாக்குதல் தொடர்பாக 80,299 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 19,185 […]
சுவீடனில் சிகரெட் துண்டுகளை பொறுக்கும் பணியில் காகங்கள்

ஐரோப்பிய நாடான சுவீடன் நகரத்தின் தெருக்களிலும் சதுக்கங்களிலும் வீசியெறியப்பட்ட சிகரெட் துண்டுகளை பொறுக்கும் பணியில் காகங்கள் ஈடுபடுத்தப்படுவதாகக் கூறப்படுகின்றது. செலவைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அங்கு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் புதிய முறையை கோர்விட் கிளீனிங் (Corvid Cleaning) எனும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதேசமயம் ஒவ்வொரு சிகரெட் துண்டையும் பொறுக்கி அதற்கான இயந்திரத்தில் போடும்போது காகங்களுக்குக் கொஞ்சம் உணவு கொடுக்கப்படும் என்றும் சுவீடனின் தெருக்களில் ஆண்டுதோறும் சுமார் 1 பில்லியன் சிகரெட் துண்டுகள் […]
உலக சாதனை படைத்த மின்னல் பதிவு : ஐ.நா.சபை

கடந்த 2020 ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி அமெரிக்காவின் தென் பகுதி வானில் வெளிப்பட்ட ஒரு மின்னலின் பதிவு புதிய உலக சாதனை படைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பி, லூசியானா மற்றும் டெக்சாஸ் முழுவதும் மொத்தம் 770 கிலோமீற்றர் தூரம் இந்த மின்னல் தெரிந்ததாகவும் ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பு ஓர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இது இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து ஜெர்மனியின் ஹம்பர்க் நகரம் வரை உள்ள தூரத்துக்குச் […]
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை எதிர்பாராதவிதமாக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரம் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 81 முதல் 83 அமெரிக்க டொலர் வரை இருந்தது. ஆனால் தற்போது ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 91 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை இந்த மாதத்துக்குள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விலை உயர்ந்தே இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் […]
எச்-1 பி’ விசா முன்பதிவு மார்ச் 1 ஆம் திகதி ஆரம்பம்: அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்-1 பி’ விசா வழங்கி வருகிறது. இந்த விசாவை உலக நாடுகளில் அதிகளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். குறிப்பாக ஐ.டி. என்றழைக்கப்படுகிற தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது. முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் ஆட்சிக் காலத்தில் ‘எச்-1 பி’ விசா பெறுவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் அந்த விசாவைப் பெற இந்தியர்கள் உள்ளிட்ட […]