இலங்கைப் பிரஜை பாகிஸ்தானில் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 100 ற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் பஞ்சாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சியால்கோட்டிலுள்ள வசிராபாத் வீதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் முகாமையாளராகப் பணி புரிந்த இலங்கைப் பிரஜையான பிரியங்க குமார…
Category: WORLD
உலகச் சந்தையில் எண்ணெய் விலை குறைந்தது
கடந்த 20 மாதங்களுக்குப் பின் உலகச் சந்தையில் எண்ணெய் விலை குறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒமிக்ரோன் கொவிட் வைரஸ் திரிபின் காரணமாக எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது. நவம்பரில் Breant கச்சா எண்ணெய் 16.4 சதவீதமும்…
கிரீஸில் கொவிட் தடுப்பூசி போடவில்லை என்றால் அபராதம்
60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் தடுப்பூசியை கட்டாயமாக்க கிரீஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.கொவிட் தடுப்பூசியை மறுப்பவர்களுக்கு மாதம் 100 யூரோ அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டுப் பிரதமர் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிதி கிரேக்க சுகாதார…
அமெரிக்கப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: 3 மாணவர்கள் பலி ; எண்மர் காயம்
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலுள்ள பாடசாலை ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உட்பட எட்டு ஆசிரியர்கள் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவனும், 14 மற்றும் 17 வயதுடைய இரு சிறுமிகளும் உயிரிழந்துள்ளனர்.காயமடைந்தவர்களில் இருவர்…
நுகர்வுப்பொருட்களின் விலை அதிகரிப்பையடுத்து லெபனானில் ஆர்ப்பாட்டங்கள்
நுகர்வுப்பொருட்களின் விலை அதிகரிப்பு, உள்நாட்டு நாணயத்தின் வீழ்ச்சி ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபானானின் பெய்ரூட்டில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பெய்ரூட்டின் பிரதான விமான நிலையத்திற்குச் செல்லும் முக்கிய பாதையை மூடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். நாட்டின் பொருளாதார நிலை மோசமடைவது வாழ்க்கைத்…
ஜப்பானில்நாளை முதல் வெளிநாட்டவர்கள் நுழையத் தடை
உலகெங்கிலும் உள்ள அனைத்து வெளிநாட்டினரையும் நாட்டினுள் நுழைய அனுமதிப்பதில்லை என ஜப்பான் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தடை நாளை (30) முதல் அமுலுக்கு வரும் என ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்துள்ளார். ஒமிக்ரோன் கொவிட் வைரஸ் வேகமாகப் பரவி…
பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடன இயக்குநர் சிவசங்கர் சிகிச்சை பலனின்றி காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு 72 வயது. தேசிய விருது பெற்ற நடன இயக்குநர் சிவசங்கர்…
வைகோ சுடர் ஏற்றி வைத்து புகழ் வணக்கம் செலுத்தினார்
மாவீரர் நாளை முன்னிட்டு, இன்று 27.11.2021 காலை 7.00 மணியளவில், மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை நிலையம் தாயகத்தில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், கொட்டும் மழைக்கு இடையே சுடர் ஏற்றி வைத்து, தமிழ் ஈழப் போரில் தங்கள் உயிர்களை ஈகம் தந்த…
6 ஆபிரிக்க நாடுகளின் விமான சேவைகளுக்கு பிரிட்டன் தடை விதிப்பு
உலகம் முழுவதும் புதிய கொரோனா தற்போது வேகமாக பரவி வருவதைத் தொடர்ந்து 6 ஆபிரிக்க நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வருகை தரும் விமானங்களுக்கு பிரிட்டன் அரசு தடை விதித்துள்ளது. புதிய வகை கொரோனா தொற்றைக் கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது…
ஆங்கிலக்கால்வாயில் படகு கவிழ்ந்து 27 பேர் பலி
பிரிட்டன் நோக்கி அகதிகளை ஏற்றிச் சென்ற அகதிகள் படகு, ஆங்கிலக் கால்வாயில் நேற்று திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 27 பேர் நீரில் மூழ்கிப் பலியாகி உள்ளனர். அந்தப் படகில் 34 பேர் பயணம் செய்திருக்கலாம் எனவும் 27 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும்…