தாய்லாந்து பிரதமர் முகக்கவசம் அணியாத காரணத்தால் 237 கனடிய டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.தாய்லாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அங்கு கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி…
Category: WORLD
பாரிஸில் இலங்கைப் பெண் கழுத்து வெட்டிக் கொலை ; ஒருவர் கைது
பாரிஸ் பிராந்தியத்தின் அர்னோவீல் (Arnouville, in Val-d’Oise) பகுதியில் கடந்த மார்ச் 31 ஆம் திகதி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த ஆசிய வம்சாவளிப் பெண் இலங்கையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். முதலில் இவர் இந்திய – பாகிஸ்தான்…
இந்தியாவுக்கு 80 மெட்ரிக் தொன் ஒக்சிஜனை அனுப்பும் சவூதி அரேபியா
கொரோனா தாக்கம் காரணமாக ஒக்சிஜன் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு 80 மெட்ரிக் தொன் ஒக்சிஜனை சவூதி அரேபியா அனுப்பவுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் 2ஆவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பல மாநிலங்களின் மருத்துவமனைகளில் ஒக்சிஜன் தட்டுப்பாடு நிலவி…
93ஆவது ஒஸ்கார் விருது விழா – 3 விருதுகளை சுவீகரித்தது ‘நோ மேட்லாண்ட்’ திரைப்படம்!
க்ளோயி சாவ் என்கிற சீனப் பெண் இயக்கிய ‘நோ மேட்லாண்ட்’ திரைப்படம் அதிகபட்சமாக மூன்று ஒஸ்கார் விருதுகளை வென்றது. உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஒஸ்கார் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கௌரவமாகக் கருதப்படுகிறது. அவ்வகையில்…
53 மாலுமிகளுடன் மாயமான நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கியதாக இந்தோனேசியா அறிவிப்பு
இந்தோனேசிய நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான, கே.ஆர்.ஐ. நங்கலா-402 நீர்மூழ்கிக் கப்பல் கடந்த புதன்கிழமை பாலித்தீவின் வட பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மாயமானது. இந்தக் கப்பலில் மொத்தம் 53 மாலுமிகள் இருந்தனர். இதையடுத்து இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் மாயமானதாக அறிவித்து…
மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து – 13 நோயாளிகள் பலி
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தாக்குதல் மிக மோசமாக இருக்கிறது. நேற்று மட்டும் 67 ஆயிரம் பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். 568 பேர் உயிரிழந்துள்ளனர். அனைத்து ஆஸ்பத்திரிகளும் நிரம்பி வழிகின்றன. போதிய ஒட்சிசன் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் தொடர்ந்து…
லிபிய கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 120 பேர் பலி
லிபிய கடற்பரப்பில் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 100 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பாவை சென்றடைவதற்கான ஆபத்தான கடற்பயணத்தில் ஈடுபட்ட குடியேற்றவாசிகளே உயிரிழந்துள்ளனர். லிபிய கடற்பரப்பில் ரப்பர் படகு கவிழ்ந்ததில் 120 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.130…
இந்தோனேசியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நீர்மூழ்கிக் கப்பல் 53 இராணுவ வீரர்களுடன் மாயம்
இந்தோனேஷியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பாலித் தீவு அருகே அந்த நாட்டு இராணுவத்துக்குச் சொந்தமான ‘நங்கலா 402′ என்கிற நீர்மூழ்கிக் கப்பல் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்த நீர்மூழ்கிக் கப்பலில் இராணுவ 53 வீரர்கள் இருந்தனர். இந்த நிலையில் பாலித்…
கிளர்ச்சியாளர்களுடன் நடந்த மோதலில் சாட் நாட்டு ஜனாதிபதி பலி
ஆபிரிக்க நாடான சாட் நாட்டில் 30 ஆண்டுக் காலமாக அதிபர் பதவி வகித்து வந்த, இத்ரிஸ் டெபி இட்னோ (68)கிளர்ச்சியாளர்களுடன் நடந்த சண்டையில் போர்க்களத்தில் நேற்று கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 11ஆம் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் வெற்றி…
நைஜீரியாவில் எண்ணெய் லொறி வெடித்துச் சிதறி 12 பேர் பலி
நைஜீரியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பெனூ மாகாணத்தில் கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு டேங்கர் லொறி ஒன்று ஓஷிக்புடு என்ற கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் வீதியில் நிலைதடுமாறி ஓடிய லொறி கிராமத்துக்குள் புகுந்து கவிழ்ந்தது.…