ஜப்பானில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் அதிகரிப்பு

ஜப்பானில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் 2021-ல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக புள்ளி விபரம் தெரிவித்துள்ளது. இதற்கு கொரோனா வைரஸ் தொற்று ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. கட்டுப்பாடுகள் அதிகரிப்பால் குழந்தைகள் நல காப்பகத்தை அடிக்கடி ஆய்வு செய்ய முடியாத நிலையும்…

சுவீடனில் சிகரெட் துண்டுகளை பொறுக்கும் பணியில் காகங்கள்

ஐரோப்பிய நாடான சுவீடன் நகரத்தின் தெருக்களிலும் சதுக்கங்களிலும் வீசியெறியப்பட்ட சிகரெட் துண்டுகளை பொறுக்கும் பணியில் காகங்கள் ஈடுபடுத்தப்படுவதாகக் கூறப்படுகின்றது. செலவைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அங்கு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் புதிய முறையை கோர்விட் கிளீனிங் (Corvid…

உலக சாதனை படைத்த மின்னல் பதிவு : ஐ.நா.சபை

கடந்த 2020 ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி அமெரிக்காவின் தென் பகுதி வானில் வெளிப்பட்ட ஒரு மின்னலின் பதிவு புதிய உலக சாதனை படைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பி, லூசியானா மற்றும் டெக்சாஸ் முழுவதும் மொத்தம்…

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை எதிர்பாராதவிதமாக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரம் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை  81 முதல் 83 அமெரிக்க டொலர் வரை இருந்தது. ஆனால் தற்போது ஒரு…

எச்-1 பி’ விசா முன்பதிவு மார்ச் 1 ஆம் திகதி ஆரம்பம்: அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்-1 பி’ விசா வழங்கி வருகிறது.   இந்த விசாவை உலக நாடுகளில் அதிகளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். குறிப்பாக ஐ.டி. என்றழைக்கப்படுகிற தகவல்…

பிரான்சில் மார்ச் முதல் உணவகங்களுக்கு புதிய சட்டம்

பிரான்சில் உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளுக்கு புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. இதன்படி உணவகம் மற்றும் சிற்றுண்டிச் சாலைகளில் இறைச்சியில் செய்த உணவுகளை விற்பனை செய்யும்பொழுது குறித்த இறைச்சி தொடர்பிலான தகவல்களை வாடிக்கையாளருக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் , இறைச்சி புதியதா…

மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலராக உயரும் சாத்தியம்

உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலராக அதிக்கும் சாத்தியம்உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கடந்த ஏழு வருடங்களில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு உலக சந்தையில் உச்சத்தை எட்டியுள்ள மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, விரைவில் 100 டொலரை தாண்டக்கூடும்…

சுனாமி தாக்கத்தின் பின் டோங்கா தீவில் முதலாவது விமானம் தரையிறங்கியது

பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள டோங்கா நாட்டுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் பொருட்களை ஏற்றிக்கொண்டு முதலாவது வெளிநாட்டு உதவி விமானம் டோங்காவை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த விமான நிலைய ஓடுபாதையில் இருந்து சாம்பலை ஊழியர்கள் அகற்றிய பிறகு, நியூஸிலாந்தின் இராணுவ விமானம்…

விலைவாசி உயர்வால் குடும்பத்தினருக்கு போதிய உணவளிக்க முடியவில்லை – கனேடிய மக்கள் கவலை

கடும் விலைவாசி உயர்வால் குடும்பத்தினருக்கு போதிய உணவளிக்க முடியவில்லை என பெரும்பான்மை கனேடிய மக்கள் கவலை தெரிவித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அண்மையில்  முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் 57% கனேடிய மக்கள் தங்கள் குடும்பத்தினருக்கு போதிய உணவளிக்க முடியாத அளவுக்கு விலைவாசி…

அண்டார்டிகாவில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்து

அண்டார்டிகாவில் காலநிலை மாற்றத்தால் பென்குவின்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.அண்டார்டிகாவில் அடெலி, ஜென்டூ என இருவகை பென்குவின்கள் வசிக்கின்றன. இந்நிலையில் காலநிலை மாற்றத்தைத் தொடர்ந்து அங்கு வெப்பநிலை அதிகரித்ததால், கடல் நீர் உறைந்து காணப்படும் பகுதிகளின் பரப்பளவு சுருங்கியது. இதனால்,…