அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 135 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதி தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது. ரெட்வுட் சானிட்டரி லாண்ட்ஃபில் அருகே நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத்தீயால் அங்கு சுற்றுச்சூழல் பெரும் மாசடைந்துள்ளது. …
Category: WORLD
மசகு எண்ணெய் 200 டொலரைத் தாண்டும் ; ஆய்வாளர்கள் எச்சரிக்கை
ரஷ்ய எண்ணெய்க்கு விலை வரம்புகளை விதிக்கும் வகையில் ஜி7 நாடுகள் செயற்பட்டால் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 200 டொலரைத் தாண்டும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். உக்ரைன் மீதான படையெடுப்பின் காரணமாக ரஷ்ய எண்ணெய் மீது விலை வரம்புகளை விதிக்கும்…
நடிகை மீனாவின் கணவர் காலமானார்
இந்தியத் திரையுலக நட்சத்திரம் நடிகை மீனாவின் கணவர் வித்தியாசாகர் நுரையீரல் அழற்சி நோயால் நேற்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றால் இவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். —————— Reported by:Anthonippillai.R
ஜோர்டானில் இரசாயன தாங்கி வெடித்து விபத்து- நச்சு வாயுக் கசிவால் 12 பேர் உயிரிழப்பு
ஜோர்டானின் அகபா துறைமுகத்தில் உள்ள ஒரு கப்பில் கிரேன் மூலம் குளோரின் தாங்கிகள் ஏற்றப்பட்டன. அப்போது, திடீரென கிரேன் செயலிழந்ததை அடுத்த, ஒரு குளோரின் தாங்கி மேலிருந்து விழுந்து வெடித்தது. இதில், பெரியளவில் மஞ்சள் நச்சுப் புகை வெளியேறியது. இதனால்,…
அமெரிக்காவில் கொள்கலன் லொறியில் இருந்து 46 சடலங்கள் மீட்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சண்டியாகோ புறநகர் பகுதியில் ரயில் தண்டவாளம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் கொள்கலன் லொறி நிற்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிசார் அந்த லொறியின் கொள்கலனைத் திறந்து பார்த்த போது,…
வீட்டை துளைத்து நின்ற ரஷ்ய ரொக்கெட்; கண்டுகொள்ளாது முகச்சவரம் செய்த உக்ரேனியர்!
உக்ரைனில் ரஷ்ய ரொக்கெட்டின் ஒரு பகுதி வீட்டை துளைத்து நின்ற போதும், அதனைக் கண்டுகொள்ளாமல் நபர் ஒருவர் முகச்சவரம் செய்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 120 நாட்களையும் கடந்து நீடித்து வரும்…
அமெரிக்க பாராளுமன்றில் துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டமூலம் நிறைவேற்றம்
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறைக் கலாசாரம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதையடுத்து, துப்பாக்கி விநியோகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. ஜனாதிபதி ஜோ பைடனும்…
40 ஆயிரம் ஊழியர்கள் போராட்டம்; 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் பிரிட்டனில் ரயில் சேவை பாதிப்பு
இங்கிலாந்தில் ரயில்வே ஊழியர்கள், சம்பளத்தை உயர்த்தக் கோரி நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். நாட்டில் விலைவாசி உயர்வுக்கு ஈடாக தங்களது சம்பளம் போதவில்லை என்றும் 11 சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும் ஊழியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். 50 ஆயிரம்…
வாஷிங்டனில் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு; பலர் படுகாயம்
அமெரிக்காவில் அண்மைக் காலமாக துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை வாஷிங்டனில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டனில் உள்ள ஒரு மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடந்து…
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி 17 பேர் பலி
பீகாரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. …